IND vs AUS 2nd T20: கம்பீர் செய்த 3 பெரிய தவறுகள்... சூர்யகுமார் யாதவ் உடனே உஷாராகணும்!

Written ByR Balaji
Published: Oct 31, 2025, 06:38 PM IST|Updated: Oct 31, 2025, 06:38 PM IST

Reasons For India defeat against Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கம்பீர் செய்த 3 தவறுகளே காரணமாக கூறப்படுகிறது. அது குறித்து பார்க்கலாம். 

1/8

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

2/8

முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது. இதனால் இரண்டாவது போட்டியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

3/8

இன்று (அக்டோபர் 31) மெல்போர்ண்ணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத இந்திய அணி தொடக்க முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. 

4/8

இதனால் 125 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மட்டுமே அதிகபட்சமாக 68 ரன்களை அடித்தார். அடுத்தபடியாக ஹர்ஷித் ராணா 35 ரன்களை அடித்திருந்தார். 

5/8

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து இந்த டார்க்கெட்டை 13.2 ஓவர்களில் அடித்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. 

6/8

இந்த தவறுகளை அடுத்த போட்டியில் திருத்திக்கொண்டால், இந்திய அணி வெற்றி பெற முடியும். ஏற்கனவே ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. 

7/8

அதாவது, முதலில் பேட்டிங் ஆர்டரை மாற்றி அமைத்தது. சஞ்சு சாம்சனை 3வது இடத்திலும் ஹர்ஷித் ராணாவை சிவம் துபே-க்கு முன்பாக களமிறக்கியதே. இதனால் மொத்த பேட்டிங் ஆர்டருமே மாறிப்போனது. 

 

8/8

இரண்டாவதாக அணியில் அர்ஷ்தீப் சிங்கை எடுக்காதது. இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்த அவரை கழற்டிவிட்டது. மூன்றாவதாக இந்த மைதான பிட்சிற்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை, குல்தீப் அல்லது வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை எடுத்திருக்கலாம்.