கில்லி விஜய்யின் தங்கச்சி..சினிமாவில் நடிக்காமல் செய்யும் பிசினஸ்! என்ன தெரியுமா?

Ghilli Vijay Sister Actress Own Business : விஜய் நடிப்பில், 2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. இந்த படத்தில், அவருக்கு தங்கையாக புவி எனும் கதாப்பாத்திரம் வரும். அவர் இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

Ghilli Vijay Sister Actress Own Business : விஜய் நடிப்பில் 2004ல் வெளியான கில்லி படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பாண்டு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமாக விஜய்யின் தங்கை புவி கதாப்பாத்திரம் வரும். இவர் தற்போது வளர்ந்து ஒரு தொழிலை தொடங்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

1 /7

21 வருடங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் படம் கில்லி. விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய், த்ரிஷாவின் கதாப்பாத்திரங்களை தாண்டி இன்னும் சில கதாப்பாத்திரங்கள் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருந்தது. அதில் ஒன்று புவி.

2 /7

விஜய்யின் தங்கையின் கதாப்பாத்திரத்தின் பெயர், புவனா. இவரை விஜய் புவி-அரிசி மூட்ட என்று செல்லமாக அழைப்பார். இந்த புவி-வேலுவின் கதாப்பாத்திரம் ரியல் லைஃப் அண்ணன்-தங்கை கதாப்பாத்திரம் போலவே இருக்கும்.

3 /7

விஜய் தங்கை புவி, இப்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டார். இவரது உண்மையான பெயர், நான்சி ஜெனிஃபர். 

4 /7

நான்சி, வள்ர்ந்த பிறகு அவரை சினிமாவில் அடிக்கடி பார்க்க முடியும் என்று பலர் எதிர்பார்த்தனர். அதே போல அவரும் நடிக்க ஆரம்பித்தார்.

5 /7

2013ஆம் ஆண்டு வெளியான தீயா வேல செய்யனும் குமாரு படத்தில் ஜெனி, ஹன்சிகாவிற்கு தோழியாக நடித்திருப்பார்.

6 /7

ஜெனிஃபர், தற்போது சுய தொழில் தொடங்கியிருக்கிறார். இவர், நேச்சுரலாக சோப் செய்து விற்பனை செய்து வருகிறார்.

7 /7

இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், இந்த தொழிலை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சினிமா வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.