Gold Price : தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறையப்போகிறது என்ற அப்டேட் வந்துள்ளது. முழு விவரம்
Gold Price : தங்கம் விலை இன்னும் இரண்டு நாட்களில் குறையப்போகிறது என்ற அப்டேட் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
தங்கம் விலை (Gold Price) தொடர்ச்சியாக அதிகரித்து வருவது சாமானிய மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்போது ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. தங்கம் விலை இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு குறையப்போகிறது. குறிப்பாக வரும் வெள்ளிக்கிழமை தங்கம் விலை குறைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் பொதுமக்களுக்கு தெரிந்தவிடும்.
ஏனென்றால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தம் மற்றும் ஹார்மூஸ் நீரிணை திறப்பு ஆகியவை உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் தங்கம் விலையை குறைப்பதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
பொதுவாக போர் நிறுத்த அறிவிப்பு வந்தால் தங்கம் விலை குறைய வேண்டும். ஏனெனில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதத் தேவையில்லை. ஆனால், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதற்கும் சில முக்கிய காரணங்கள் உள்ளன.
போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 15 விழுக்காடு வரை கடுமையாக சரிந்துள்ளது. எண்ணெய் விலை குறையும் போது, அது பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் டாலருக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று சரிவடைந்துள்ளதால், மற்ற நாட்டு கரன்சிகளைக் கொண்டவர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகிறது. இது தங்கத்திற்கான தேவையை அதிகரித்து விலையை உயர்த்தியுள்ளது.
இது வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிக ஒப்பந்தம் என்பதால், சந்தையில் இன்னும் ஒருவித தயக்கம் நிலவுகிறது. இது நிரந்தர அமைதிக்கு வழிவகுக்குமா என்ற சந்தேகம் விலையை குறையவிடாமல் தடுத்து வருகிறது.
இருப்பினும், தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கலாம். அதற்கும் சில காரணிகள் உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டு, போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டால் தங்கம் விலை நிச்சயமாக குறைய வாய்ப்புள்ளது.
போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்கனவே மிக உயரத்தில் உள்ளது. பதற்றம் முற்றிலும் தணிந்தால், War Premium எனப்படும் கூடுதல் விலை குறைந்து, தங்கம் இயல்பான நிலைக்கு வரும்.
நிபுணர்களின் கணிப்புப்படி, இந்த போர் நிறுத்தம் வெற்றிகரமாக தொடர்ந்தால், சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு $4,650 முதல் $4,600 வரை குறையக்கூடும். இந்திய சந்தையில், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1,48,500 முதல் ரூ.1,47,000 வரை என்ற நிலையை நோக்கி இறங்க வாய்ப்புள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இன்று ஏற்பட்டுள்ள விலை உயர்வு என்பது ஒரு உடனடி எதிர்வினை மட்டுமே. போர் நிறுத்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுமூகமாகத் தொடர்ந்தால், வரும் நாட்களில் தங்கம் விலை படிப்படியாக குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.