Sani Udhayam: மார்ச் மாத சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் மாதம் சனி உதயம் நடக்கவுள்ளது. இதனால் 4 ராசிகள் அதிக நன்மைகளை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகள் தவிர, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என கிரகங்களில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
நீதியின் கடவுளான சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். தற்போது அவர் கும்ப ராசியில் உள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பகவான் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி, காலை 5:05 மணிக்கு அவர் மீன ராசியில் உதயமாகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் வெற்றி அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும். அந்த 4 அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் மிகவும் நன்மை பயக்கும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். பணி பெரிதும் பாராட்டப்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும். அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நிதி நிலைமையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பின் வரும் சனி உதயம் நல்ல காலத்தின் ஆரம்பக்கட்டமாக இருக்கும். புகழ், செல்வம், பணம் என அனைத்தும் கிட்டும். நீண்ட காலமாக செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நேரமாக இது இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். உடல்நலம் மேம்படும், மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையாக உணருவீர்கள். மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் நுழையும். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி உதயத்திற்கு பிறகு நல்ல நாட்கள் தொடங்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வேலை மாற விரும்பினால், இது அதற்கு ஏற்ற நேரமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி உதயம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சனி உதயமானவுடன், தடைபட்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்துமுடியும். சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் உறவுகள் சுமுகமாக இருக்கும்.
பொதுவாக சனி பகவானை கண்டு மக்கள் அஞ்சுவதுண்டு. ஆனால் அது தேவையில்லை. நாம் செய்யும் செயல்கள் நல்லவையாக இருந்தால், அதற்கு அவர் அளிக்கும் பலன்களும் சுப பலன்களாகவே இருக்கும்.
சனி பகவானின் அருள் பெறவும், ஏழரை சனி பாதிப்புகள் குறையவும் சனி கிழமைகளில் கோவிலுக்கு சென்று சனி பகவானின் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும் எப்போதும் நேர்மை, ஒழுக்கம், உண்மை, ஈகை ஆகிய குணங்களை பின்பற்றும் நபர்களை சனி பகவான் சோதிப்பதில்லை.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.