சுக்கிரன் கிரக அஸ்தமனம்: ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, கிரகங்களின் அஸ்தமனங்கள், கிரகங்களின் உதயங்கள், வக்கிரப் பெயர்ச்சிகள் ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பங்குனி மாதத்தில் வரும் மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக மார்ச் 18 ஆம் தேதி சுக்கிரன் அஸ்தமனம் ஆகிறது. சுக்கிரன் கிரக அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அசுரர்களின் குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கையை, செல்வ வளத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், அழகு, பணம், பொருள், வசதி என அனைத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.
சுக்கிரன், வரும் மார்ச் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அஸ்தமனம் ஆவதால் சில ராசிக்காரர்கள், பெருத்த பலன் அடைவார்கள் என்றும், வாழ்க்கையில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகவும் சாதகமாக இருக்கும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மேஷ ராசியினருக்கு சுக்கிரனின் அஸ்தமனம் நிதி ஆதாயங்களை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் பொருளாதார நிலை வலுவாகி கடன் பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷப ராசியினருக்கு சுக்கிரனின் அஸ்தமனம் சிறந்த பலன்களை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் அஸ்தமனம் சாதகமான பலன்களை தரும். குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். செல்வ செழிப்பு உண்டாகும். பொருளாதாரம் வலுவாக இருக்கும்.
சிம்ம ராசியினருக்கு சுக்கிரனின் அருளால், வாழ்க்கையில் சுபிட்சத்திற்கு குறைவிருக்காது. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் தொழிலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.
கும்ப ராசியினருக்கு சுக்ரனின் அருளால், கை வைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்படும் மாற்றம், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான வாய்ப்பை கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சி கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.