சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்
செல்வம், ஆடம்பரம், திருமண சுகம், வசீகரம், பேச்சாற்றல், அறிவாற்றல் போன்றவற்றின் அதிபதியாக இருப்பவர் சுக்கிரன். ஒருவர் வாழ்வில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் தன் வாழ்நாளில் பல வித உச்சங்களைத் தொடுகிறார்.
சுக்கிரன் டிசப்மர் 28 ஆம் தேதி இரவு 11.48 மணிக்கு கும்ப ராசிக்குள் பெயச்சி ஆகிறார். ஜனவரி 28 வரை இந்த ராசியில் இருப்பார். ஆண்டின் முடிவில் நடக்கும் இந்த சுக்கிரன் பெயர்ச்சி மிக முக்கியமனாதாக பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். பல வித வெற்றிகளை காண்பார்கள். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புத்தாண்டில் பல மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் திருமணம் ஒன்று நடக்கலாம். வேலை தேடிக்கொண்டு இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்: டிசம்பர் மாத இறுதியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். 2025 ஆம் ஆண்டின் துவக்கமே இவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. பணி மாறும் எண்ணத்தில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பொழுதை அளிக்கும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம்: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் புத்தாண்டில் அன்னை லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவீர்கள். செய்யும் பணிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளால் மேல் அதிகாரி மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம்: கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். வருமானம் பன்மடங்கு உயரலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சுமுகமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புத்தாண்டில், உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் கடனில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தின் உச்சத்தை தொடுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.