PG மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இதோ!

Written BySudharsan G
Published: Jul 17, 2025, 03:35 PM IST|Updated: Jul 17, 2025, 03:35 PM IST

Tamil Nadu Government: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது.

Admission for Postgraduate Courses: தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி, கலாந்தாய்வு நடைபெறும் தேதி, வகுப்புகள் தொடங்கும் தேதி உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு அரசு1/8

தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் இளங்கலை, இளநிலை படிப்புகளை போன்று முதுநிலை படிப்புகளுக்கான (Postgraduate Courses) மாணவர் சேர்க்கைகளும் நடைபெற்று வந்தன. 

 

தமிழ்நாடு அரசு2/8

தமிழ்நாடு அரசு

இந்நிலையில், முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) தரப்பில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு அரசு3/8

தமிழ்நாடு அரசு

2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Tamil Nadu Government Arts and Science Colleges) முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள பதிவு நடைபெற்று வந்தது. 

 

தமிழ்நாடு அரசு4/8

தமிழ்நாடு அரசு

மேலும், இந்த முதுநிலை படிப்புகளுக்கான முன்பதிவுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி கடந்த ஜூலை 15 ஆகும். 

 

தமிழ்நாடு அரசு5/8

தமிழ்நாடு அரசு

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி இணையதள முன்பதிவு செய்ய ஜூலை 31ஆம் தேதி வரை கடைசி தேதி கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

 

தமிழ்நாடு அரசு6/8

தமிழ்நாடு அரசு

மேலும், இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு அரசு7/8

தமிழ்நாடு அரசு

வரும் 2025 ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்களுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசு8/8

தமிழ்நாடு அரசு

  தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கும்.