12ம் வகுப்பு முடித்தால்... ரூ.70,000 வரை சம்பளம் கிடைக்கும்; தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu Government: ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க விருப்பமா... உங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை மாத வருமானம் பெற வேண்டுமா... அப்படியென்றால் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை உடனே படியுங்கள்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு (Hotel Management Courses)  நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதில் என்ன படிப்புகள் வரும், இதற்கான கல்வித் தகுதி என்ன, பிற தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது, எவ்வளவு மாத வருமானம் வரும் ஆகியவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

 

1 /8

தமிழ்நாடு அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை ஒவ்வொரு துறைகள் ரீதியாகவும் முன்னெடுத்து வருகிறது.

2 /8

அந்த வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

3 /8

அதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc), பட்டயப்படிப்புகளுக்கான (Diplomo) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

4 /8

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Craftmanship course in food production & Patisserie என்ற கோர்ஸ் ஒன்றரை ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும்.

5 /8

அதேபோல், 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு B.Sc Hospitality & Hotel Administration என்ற கோர்ஸ் 3 ஆண்டுகளுக்கும், Diplomo in Food Production கோர்ஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.

6 /8

இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என பார்த்தால், விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 45% பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

7 /8

இதற்கு விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் தாட்கோ அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், (www.tahdco.com) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.

8 /8

இந்த படிப்புகளை நிறைவு செய்யும்பட்சத்தில் ஆரம்ப கால மாத ஊதியம் என்பது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை இருக்கும் என்றும், அதன்பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை மாத வருமானம் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.