விவசாயிகளுக்கு நல்ல நியூஸ்... தரிசு நிலங்களிலும் இனி சாகுபடி செய்யலாம் - அரசின் நச் திட்டம்

Written BySudharsan G
Published: Sep 10, 2025, 12:14 PM IST|Updated: Sep 10, 2025, 12:17 PM IST

Tamil Nadu Government: தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டத்தினை விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ளது. இத்திட்டம் குறித்து சுருக்கமாக இங்கு காணலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம், விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் உள்ளிட்டவற்றை இதில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு திட்டங்கள்1/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு ஓர் உரிய வாய்ப்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்2/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை பசுமை நிலங்களாக மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. 

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்3/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

இந்த திட்டத்தின் நோக்கம், திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் உள்ளிட்ட மேலும் விவரங்களை இங்கு காணலாம். 

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்4/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரிப்பதே திட்டத்தின் முதன்மையான நோக்கம். 10 முதல் 15 ஏக்கர் வரையிலான தரிசு நிலத்தொகுப்பை பதிவு செய்திடலாம்.

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்5/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க உங்களின் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்ட 2,504 கிராம பஞ்சாயத்தில் இருக்க வேண்டும் என்பதே முக்கிய தகுதியாகும். 

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்6/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொடகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். 

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்7/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை விரிவாக்கம் மையங்கள் அல்லது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகங்களை அணுகவும். 

 

தமிழ்நாடு அரசு திட்டங்கள்8/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

மேலும், புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள QR கோடை ஸ்கேன் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம்.