தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான அரசாணை!

Wedding Advance Increase for Govt Employees: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியாகி உள்ளது. 

1 /6

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கு திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்படு வருகிறது. இதுவரை ரூ. 10 வரை திருமண முன்பணமாக வழங்கப்பட்டு வருகிறது.  

2 /6

இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிகாலத்தின் தங்களின் தேவையின் அடிப்படையில்  திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

3 /6

இந்த நிலையில்,  இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. திருமண முன்பணத்தை உயர்த்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகி இருக்கிறது.

4 /6

திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை கிடைக்கும். இது, 36 தவணைகளில் வசூலிக்கப்படும். 

5 /6

பெற்றோர், கணவன், மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும்.   

6 /6

இந்த பணம் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு திருமணத்தின்போது, பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.