Kalaignar Magalir Urimai Thogai : ஜூலை 15ல் மகளிர் உரிமைத் தொகை தவிர வேறு எந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
1/11தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறது. இந்த முகாமின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர இன்னபிற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அவை என்னென்ன திட்டங்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
2/11பட்டா மாறுதல், பட்டா பெயர் திருத்தம், நில அளவீடு ஆகிய சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பெயர் திருத்தம் என்றால் ஆதார் அட்டை, இறந்தவரின் பெயர் மாற்றம் என்றால் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்று ஆகிய ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
3/11அதேபோல் இந்த முகாமில் வாரிசுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறுகுறு விவசாயி சான்று, ஓபிசி சான்று ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
4/11பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ், தாமதமாக பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்
5/11கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை, திருமணமாகாத பெண்களுக்கான உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், மின் கட்டண பெயர் மாற்றம், மின் கட்டணம் மாற்றம் ஆகிய சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
6/11ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் மற்றும் சுயதொழில் தொடங்க கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவிக் குழு கடன், மாற்றுத்திறனாளிகளுகான அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
7/11மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் உதவிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, செயற்கைகால், காதுகேட்கும் கருவி ஆகிய திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
8/11ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தாட்கோ கடன், இணையவழி வீட்டுமனை பட்டா, பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
9/11தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய விண்ணப்பம், பிற்படுத்தப்பட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான டாம்செட்கோ, டாப்செட்கோ கடனுதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
10/11கலைஞர் கைவினைத் திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம், ஆதார் தொடர்பான சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
11/11கடைசியாக ஏற்கனவே கூறியதுபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். மேலே கூறப்பட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அவற்றுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.