Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

UPI Service Outage: பணம் பெறுதல், பணம் அனுப்புதல் என UPI சேவையை பயன்படுத்த இயலாமல் நாடு முழுவதும் பலரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் இருந்து பலருக்கும் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னை தற்போது அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

1 /8

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 12) காலை முதல் UPI சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பலருக்கும் பண பரிவர்த்தனை செய்ய இயலவில்லை. இதேபோன்று இம்மாதத்தில் 3வது முறையாக நடக்கிறது.   

2 /8

நாடு முழுவதும் தனிநபர்கள் மட்டுமின்றி வணிகர்களும் இந்த சேவை முடங்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் பணப் பரிவர்த்தனைக்கு எளிமையான வழியாக UPI சேவை பார்க்கப்படுகிறது.   

3 /8

DownDetectors இணையதளத்தின்படி, UPI சேவை பாதிப்பு விரிவான அளவில் ஏற்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் 1,168 புகார்கள் வந்துள்ளன.   

4 /8

இந்த 1,168 புகார்களில் கூகுள் பே பயனர்கள் 96 புகார்களையும், பே டிஎம் பயனர்கள் 23 புகார்களையும் அளித்துள்ளனர். மீதம் வந்த புகார்கள் எவற்றில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. பேமண்ட்ஸ் சார்ந்து 81% புகார்களும், பணப் பரிவர்த்தனை சார்ந்து 17% புகார்களும், Purchase செய்வதில் 2% புகார்களும் பதிவாகி உள்ளனர.   

5 /8

UPI சேவை பாதிப்பு குறித்து NPCI அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில்,"NPCI தற்போது அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது, இதனால் பகுதி UPI பரிவர்த்தனை நிராகரிப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அறிவிப்போம். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என தெரிவித்துள்ளது.   

6 /8

UPI பயனர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக இன்று UPI சேவையை பயன்படுத்த இயலாமல் பாதிக்கப்படுள்ளனர். கடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து இங்கு காணலாம்.   

7 /8

மார்ச் 26: கடந்த மார்ச் 26ஆம் தேதி கூகுள் பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளில் பரிவர்த்தனை செய்ய இயலாமல் சுமார் 3000 புகார்கள் DownDetector தளத்தில் பதிவானது. 2-3 மணிநேரம் பயனர்களால் UPI சேவையை பயன்படுத்த இயலவில்லை.  

8 /8

ஏப்ரல் 2: இது இன்னும் பெரிய பாதிப்பை உண்டாக்கியது. சுமார் 514 புகார்கள் DownDetector தளத்தில் பதிவானது. 52% பயனர்கள் UPI செயலியை பயன்படுத்த இயலாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பணப்பரிவர்த்தனை தடை செய்யப்பட்டது.