Sevvai Peyarchi Palangal: ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ளனர். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mangal Gochar: ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவர் நிலம், சொத்து, வீரம், விவேகம், துணிச்சல், வீடு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும், 4 நாட்களில் செவ்வாய் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியுடன், ஜூன் மாதத்திலிருந்து நடந்து வரும் கேது மற்றும் செவ்வாய் கிரகத்தின் குஜகேது யோகம் முடிவடையும்.
இந்த பெயர்ச்சியின் மூலம் செவ்வாய் குரு மற்றும் சுக்கிரனுடன் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்குவார். மேலும் செவ்வாயும் சூரியனும் அவற்றின் நிலை காரணமாக திரி-ஏகாதச யோகத்தை உருவாக்கும். இந்த யோகங்கள் சுப விளைவுகளை அளிக்கும். குறிப்பாக, செவ்வாய் பெயர்ச்சி ரிஷபம் உட்பட 5 ராசியினருக்கு எதிர்பாராத நற்பலன்களை அளிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். கல்வித் துறையிலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க முயற்சிப்பவர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் பயனடைவார்கள். இந்த நேரத்தில் துணிச்சலான முடிவை எடுப்பதன் மூலம் நீங்கள் பயனடைய முடியும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து தொடர்பான தகராறுகள் ஏதேனும் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அற்புதமான நன்மைகளை தரக்கூடும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். இந்த நேரத்தில் நீங்கள் வாகனங்கள் மற்றும் மின்சார உபகரணங்களை வாங்கலாம். உங்கள் வீட்டில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். தாய் மற்றும் தாய் தரப்பிலிருந்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தொழிலில் நல்ல வருமானம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் மாற்றத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் தைரியமும் உற்சாகமும் உங்களிடம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு கடினமாக இருந்த வேலையும் இப்போது எளிதாக முடிக்கப்படும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக பயணம் செய்ய வாய்ப்பு இருக்கலாம், இது உங்களுக்கு நன்மை பயக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் வருமானத்தில் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகமாகும். எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த செவ்வாய் பெயர்ச்சி நன்மை பயக்கும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கல்வி மற்றும் தொழிலில் முன்னேற அதிக வாய்ப்பு கிடைக்கலாம். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். விளையாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி மிகவும் நல்லதாக இருக்கும். சிறிய முயற்சியிலேயே உங்களுக்கு பெரிய வெற்றியைத் தந்து அதிர்ஷ்டம் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். குடும்பத்தில் மரியாதை கிடைக்கும்.
செவ்வாய் கிரகத்தின் அருள் பெற, வாழ்வின் அனைத்து செல்வங்களையும் பெற, 'ஓம் வீரத்வஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பௌம: ப்ரசோதயாத்' என்ற அங்காரக காயத்ரியை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.