Sani Nakshatra Peyarchi: ஜூன் 7ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு ஏராளமான நற்பலன்கள் காத்திருக்கின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இது கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் நடந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் மார்ச் மாத இறுதியில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் ஏழாம் தேதி சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆனார். ஜூன் மாதம் நடந்துள்ள தனி நட்சத்திர பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
சனி பெயர்ச்சி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் மிகப்பெரிய நன்மைகள் கைகூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றும் இந்த சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். பழைய தகராறுகளால் வீட்டில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் நெருங்கிய உறவினர்களுடன் புதிய தொழிலைத் தொடங்கலாம். போனஸ் கிடைப்பதால் அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பண நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள். காதல் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஆரோக்கியம் துணை நிற்கும். இது தவிர, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மிதுன ராசிக்காரர்கள் சனி பகவானை மகிழ்விக்க, அவரது சன்னிதியில் எள் விளக்கு ஏற்றி வழிபடலாம். மேலும், கருப்பு எள் மற்றும் கருப்பு நிற பொருட்களை தானமாக வழங்குவதும் சிறப்புவழங்குங்கள்.
சிம்மம்: சமீபத்தில் நடந்த சனி பெயர்ச்சி காரணமாகவும் ஜூன் 7 ஆம் தேதி நடந்த சனி நட்சத்திர பெயர்ச்சி காரணமாகவும் சிம்ம ராசிக்காரர்கள் அதிகமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலதிபர்கள் இந்த காலத்தில் செய்யும் முதலீடுகளால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். அலுவலக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்ம ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியின் நன்மைகளை மொத்தமாக பெறவும் தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறவும் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மேலும், ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்: சனி நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால், அவர்கள் தங்கள் இலக்குகளை நேரத்திற்கு முன்பே அடைவார்கள். தொழிலதிபர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால் கடின உழைப்புக்கு தக்க வெகுமதி கிடைக்கும். பழைய சச்சரவுகள் தீர்க்கப்படும், உறவுகளில் நெருக்கம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் உற்சாகமாக உணருவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, கோளறு பதிகம், விநாயகர் அகவல் போன்ற ஸ்லோகங்களை சொல்வது நல்லது. மேலும் தினமும் சனி காயத்ரியை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.