Gratuity Calculation: பணிக்கொடை கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன? இதற்கான விதிகள் என்ன? பொதுவாக எவ்வளவு பணிக்கொடை கிடைக்கிறது?
Gratuity Calculator: கிராஜுவிட்டி நிதி பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஊழியர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரமாகவும் இருக்கின்றது. நீங்கள் ஒரே நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தால், ₹65,000 சம்பளத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதியை பணிக்கொடையாக பெறலாம். இது உங்கள் இறுதி சம்பளம் மற்றும் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஓய்வூதியப் பலனாகும்.
1/11இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கியமான நிதி பாதுகாப்பாக பணிக்கொடை வழங்கப்படுகின்றது. தனியார் துறை, அரசு பணிகள் என எங்கு வேலை செய்தாலும், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், பணிக்கொடை பெற நீங்கள் தகுதியுடையவர்.
2/11கிராஜுவிட்டி என்பது நிறுவனம் தனது ஊழியர்களின் நீண்ட சேவைக்கு ஈடாக வழங்கும் ஒரு வகையான "விசுவாச போனஸ்" ஆகும். ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது ஓய்வுபெறும் போது அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகின்றது.
3/11இது எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பணிக்கான சான்றாகவும் செயல்படுகிறது. இந்தியாவில், "பணிக்கொடை செலுத்தும் சட்டம், 1972" -இன் கீழ் செயல்படும் நிறுவனங்களில் இந்த வசதி அளிக்கப்படுகின்றது.
4/11சட்டத்தின்படி, ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் பணிக்கொடை சலுகைகளைப் பெறுகிறார். ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகள் முடிப்பதற்கு முன்பு வேலையை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு பணிக்கொடை பெறும் உரிமை இல்லை.
5/11இருப்பினும், பணியாளரின் மரணம் அல்லது நிரந்தர இயலாமை போன்ற சில சூழ்நிலைகளில், இந்தத் தேவைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும் அந்தத் தொகை, தேவைப்பட்டால் ஊழியரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகின்றது.
6/11பணிக்கொடை இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது: பணிக்கொடை = (கடைசி மாத சம்பளம் / 26) × 15 × மொத்த சேவை ஆண்டுகள்.
7/11பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்? இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளம் ₹65,000 (அடிப்படை + DA) என்றும், அவரது சேவை காலம் 7 ண்டுகள் என்றும் வைத்துக்கொள்வோம். பணிக்கொடை கணக்கீட்டின்படி, அவருக்கு கிராஜுவிட்டி தோராயமாக ரூ.2,62,500 வழங்கப்படும். இந்தத் தொகை அடிப்படையில் அவரது சேவை மற்றும் விசுவாசத்திற்கான வெகுமதியாகும். இது ஓய்வு பெறும்போது அல்லது வேலையை விட்டு வெளியேறும்போது மொத்தமாக வழங்கப்படுகிறது.
8/11பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு தற்போது ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.65,000 ஆக இருந்தால், சூத்திரத்தின்படி, 7 வருட சேவைக்கான பணிக்கொடை ₹2,62,500 ஆகும்.
9/11ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது ஓய்வு பெறும்போது பொதுவாக கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும், பல நிறுவனங்கள் இப்போது ஆன்லைன் கிராஜுவிட்டி கால்குலேட்டர்களை வழங்குகின்றன. இதனால் ஊழியர்கள் தங்களுக்குத் தகுதியான சரியான தொகையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
10/11இந்தியாவில் கிராஜுவிட்டி தொடர்பான வரி விதிகள் முற்றிலும் வெளிப்படையானவை. அரசு ஊழியர்கள் தங்கள் முழு கிராஜுவிட்டியையும் வரி இல்லாமல் பெறுகிறார்கள். அதே நேரத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே விலக்கு அளிக்கப்படுகின்றது. உங்கள் நிறுவனம் 1972 ஆம் ஆண்டு பணிக்கொடை செலுத்துதல் சட்டத்தின் கீழ் வந்தால், உங்களுக்கு மூன்று தொகைகளில் குறைவான தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்: ₹20 லட்சம், சூத்திரத்திலிருந்து பெறப்பட்ட தொகை அல்லது உண்மையான பணிக்கொடை. இந்தத் தொகைக்கு மேல் உள்ள தொகைக்கு வரி வசூலிக்கப்படும்.
11/11பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான பணிக்கொடை தொகை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.