Gujarat Titains - Chennai Super Kings IPL Trade: 2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
CSK Washington Sundar Trade Deal Latest Update: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி வரும் அதே வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும் வாஷிங்டன் சுந்தருக்காக பேசி வருவதாகவும் அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக விரும்புகிறார் என தெரிந்த உடனேயே பல்வேறு அணிகளும் அவருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சுவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
சாம்சன் வேண்டுமென்றால் ஜடேஜா மற்றும் சாம் கரன் தங்களுக்கு வேண்டும் என்று சென்னையிடம் ராஜஸ்தான் டீல் பேசி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த டீலுக்கு சென்னை அணி ஒப்புக்கொண்டதுபோல் இன்னும் செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.
ஒருவேளை ஜடேஜாவை கொடுக்க சென்னை அணி ஓப்புக்கொண்டால் அவரது இடத்தை நிரப்ப சரியான வீரர் வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில், அவரது இடத்தை நிரப்ப வாஷிங்டன் சுந்தரை கொண்டுவரலாம் என்ற யோசனையுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி பேசுவதாக கூறப்படுகிறது.
இந்த டிரேட்டிங் டீலை ஏற்கனவே குஜராத் அணி மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது முற்றிலுமாக மறுத்து வாஷிங்டன் சுந்தரை தர மாட்டோம் என்று குஜராத் அணி திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்காலத்தை யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் மூன்று இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். இதன் காரணமாக ஒரு சிறந்த வீரரை விட்டுக்கொடுக்க நாங்கள் வெளியேற்ற மாட்டோம் என மறுத்ததாக கூறப்படுகிறது.
2017ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், ஹைதராபாத் அணியில் பயணித்து இருக்கிறார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இதுவரை 66 போட்டிகளில் விளையாடி 511 ரன்களையும் 39 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.