குரு சந்திரன் சேர்க்கை: கோடீஸ்வர ராஜயோகத்தை இன்றுமுதல் சந்திக்கும் 3 ராசிக்காரர்கள்!
சந்திரன் இன்று சரியாக 1.18 மணியளவில் வியாழன் அமர்ந்திருக்கும் ரஷிப ராசியில் சந்திக்கயிருக்கிறார். இதனால் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கோடீஸ்வர ராஜயோகம் தானாகத் தேடி வரும்.
ரிஷபம் ராசிக்காரர்கள்:இந்த ராசிக்காரர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் நலம் காண்பார்கள். பண நெருக்கடியிலிருந்து ஒரு தெளிவான மன நிம்மதி கிடைக்கும். பண சிக்கல் அல்லது ஏதேனும் பணம் வராமல் சிக்கி இருந்தால் அது உங்களைத் தேடி வரும்.
ரஷிப ராசிக்காரர்களுக்கு சில நெருக்கடிகள் வரலாம். ஆனால் பொறுமையுடன் கையாண்டால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் சுலபமாகத் தீர்க்க முடியும். ரிஷபத்தில் திருமணமாகாதவர்கள் இருந்தால் இதற்கான செய்திகள் விரைவில் தேடி வரும். நிதி நெருக்கடிகள் கணிசமாகக் குறையும்.
கன்னி ராசிக்காரர்கள்: இந்த ராசிக்காரர்கள் பொறுமையுடன் இருந்தால் பொற்காலமும் பொற்காலமாய் மாறும். குடும்ப உறவில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீது மதிப்புக் கூடும்.
கன்னி ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்குப் பல மடங்கு வெகுமதி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் தங்களின் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கான வெகுமதி அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதே.
விருச்சிக ராசி: குரு- சந்திரன் சேர்வதால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒரு புதுவிதமான மாற்றம் நிகழப்போகிறது. வருமானத்தில் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் தொழில் தொடங்க முன்வந்தால் அதில் நிச்சயம் வெற்றி இலாபம் காண்பீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் வேலையில் சிறப்பாகச் செயல்படுவார்கள். மனக்கசப்புகளிலிருந்து ஒரு முடிவு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும், உங்கள் கோபத்தைத் தணித்தால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் பண மழை கொட்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.