குரு பெயர்ச்சி 2025: குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டு. குரு பகவானின் அருள் கிடைத்தால், வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் பெற்று வளமாக வாழலாம்.
நவ கிரகங்களில் குரு பகவான் சுப பலன்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற குரு பகவானின் அருள் தேவை.
குரு பெயர்ச்சியினால் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கவும், குரு பகவானின் அருளை பெறவும், ஜாதகத்தில் குருவின் நிலை வலுவடையவும், குருவின் தோஷங்களை நீக்கவும், சில எளிய பரிகாரங்கள் உதவும்.
ஜோதிடத்தில், சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெயர்ச்சி வரும் மே மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தையும் பெற சில பரிகாரங்கள் அனைத்து ராசிகளுக்கும் கைகொடுக்கும்.
குரு பகவானுக்கு, அவருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று, கொண்டை கடலையை ஊறவைத்து, கோர்க்கப்பட்ட மாலையை சாற்றி வழிபடுவது பலன் தரும். கொண்டைக்கடலையை தானமாக கொடுப்பதும் பலன் தரும்.
இந்து மதத்தில் தீப வழிபாடு மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. குரு பகவானின் அருளைப் பெற குரு ஓரையில், நவகிரக சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது பலன் தரும்.
இந்து மதத்தில் மஞ்சள், பூஜையில் சேர்க்கப்படும் இன்றியமையாத பொருளாக உள்ளது. குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால், மஞ்சளை தானமாக கொடுப்பதும், மஞ்சள் கிழங்கை கொண்டு பூஜிப்பதும் நல்ல பலனை கொடுக்கும்.
குரு பரிகார தலங்களான, திருவலிதாயம், தென்குடி திட்டை, திருச்செந்தூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, குருபகவானே வணங்கி அருளைப் பெறலாம்.
நவரத்தினங்களில் புஷ்பராகம், குருவுக்கு உகந்த ரத்தினமாக கருதப்படுகிறது. இதனை அணிவதால் ஜாதகத்தில் குருவின் நிலை வலுப்பெறும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.