Guru Peyarchi 2025: மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இது குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகின்றது. குரு பெய்ரச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சி ஆகும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என இங்கே காணலாம்.
குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இது இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் ஏற்படும், இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குரு பெயர்ச்சி காலம் இந்த ராசிகளுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: வெளிநாட்டில் வேலை செய்யும் எண்ணம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். படைப்புத் துறைகளில் பணிபுரிபவர்கள் நன்மையடைவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சிம்மம்: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். சொத்து வாங்குவதிலோ அல்லது முதலீடு செய்வதிலோ பெரும் லாபம் கிடைக்கும். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும். செலவுகள் குறைந்து வங்கி இருப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழிலில் பொருளாதார விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்: துலா ராசிக்க்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும். தொழிலதிபர்கள் மற்றும் அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்ந்து நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் அதிகரிக்கும். நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்: குரு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் மேம்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.
மீனம்: குரு பெயர்ச்சி 2025, மீன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் விரைவான அதிகரிப்பு இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கக்கூடும். நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் இருக்கும்.
குரு பகவானின் அருள் பெற 'ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.