குரு பெயர்ச்சி 2025: 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. வெற்றி மழையில் நனையப்போறீங்க

Guru Peyarchi 2025: சுப கிரகமான குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மகள் கிடைக்கும்? அந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Guru Peyarchi Palangal: அறிவாற்றல், பணம், செல்வம், கல்வி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் காரணி கிரகமாக குரு இருக்கிறார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

1 /10

கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

2 /10

குரு பகவான் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். குரு பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

3 /10

சுபகரமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாதம் 14ஆம் தேதி குரு மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 2025 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ஆகிய இரண்டு முக்கிய ஜோதிட நிகழ்வுகளும் நடக்க உள்ளன.

4 /10

மே மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். குரு பெயர்ச்சிக்கு பிறகான காலம் இவர்களுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /10

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை அளிக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நிறைவேறும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். பணி இடத்தில் பாராட்டுகளும் ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

6 /10

மிதுனம்: மிதுன ராசியில் தான் குரு பெயர்ச்சியாக உள்ளார். இந்த குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை செல்வம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.  

7 /10

சிம்மம்: குரு பெயர்ச்சி 2025 சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வணிகத்தில் லாபம் பெருகும். முன்னர் செய்த முதலீடுகளில் இப்பொழுது நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

8 /10

மகரம்: குரு பெயர்ச்சி 2025 மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வேலை, வணிகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

9 /10

குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்று ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது. இது தவிர வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னதியில் விளக்கேற்றி வழிபடலாம்.  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.