Guru Peyarchi 2025: குருவின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வம், வழிபாடு, அறிவு, மதம் மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரணியான குரு எந்த ராசிக்கு எப்படி பட்ட பலனைத் தருவார் என்பதை பார்ப்போம்.
Jupiter Tranist: 13 மாதங்களுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி நிகழும். இந்த குரு பெய்ரச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என இங்கே காணலாம்.
இந்த முறை குரு பெயர்ச்சி மே 14, 2025 அன்று இரவு 11.20 மணிக்கு நிகழும். ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், லாபம், நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி இந்த 6 ராசிக்காரர்களுக்கும் நல்ல நேர்மறையான மாற்றத்தை தரும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணலாம். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நன்மை பயக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி மங்களகரமான பலன் கிடைக்கும். செல்வம் மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும், வருமானமும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்: குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். அதிர்ஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கலாம். உயர்கல்வி மற்றும் பதவி உயர்வுக்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பெற்றோரின் முழு ஆதரவை பெறுவீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தாயாரின் உடல்நிலை மேம்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.