மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இதன் தாக்கத்தால் இவர்களது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வருமானம் இருக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். பதவி, கௌரவம் உயரும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அசுப பலன்களைத் தரும். அவர்களின் நன்மதிப்பு பாதிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள், தடைகள் ஏற்படும். வேலையில் தேவையற்ற தாமதம் ஏற்படும். அதிகப்படியான செலவுகளால் பொருளாதார நிலை பலவீனமாகவே இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பிரியும் நிலை ஏற்படலாம். சண்டைகள் அதிகரிக்கலாம். நிதி இழப்பு ஏற்படும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை பலவீனமாகவே இருக்கும். நோயால் உடல் நலக்குறைவு ஏற்படும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். அதன் தாக்கத்தால் இவர்களது புகழ் உயரும். அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவும் வலுவாகவும் இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகன் பிறப்பால் குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்வாதாரத்தில் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சிக்கலான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். நிதி நிலை பலவீனமடையும். தேவையற்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவதூறு ஏற்படும். மனம் சோகமாக இருக்கும். வேலையில் தோல்வி ஏற்படும். மன உளைச்சல் ஏற்படும்.
கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன் தாக்கத்தால் செல்வம் பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பொருளாதாரத் திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். அரசிடமிருந்து ஆதாயம் கிடைக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பயணங்கள் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி காலத்தில் பல பிரச்சனனைகளை சந்திக்க நேரிடலாம். நீதிமன்றம், வழக்குகளில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உண்டு. திருடர்களால் பயம் ஏற்படும். வாழ்வாதார இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். பண இழப்பு காரணமாக நிதி நிலை பலவீனமாக இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களது நற்பெயர் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை சிறப்பாகவும் வலுவாகவும் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். ஆடம்பரப் பொருட்களைப் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதற்கு வீட்டில் சூழ்நிலை இனிமையாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அசுப பலன்களை அளிக்கும். உடல் நலக்குறைவால் மனம் சோகமாகவும் சோர்வுடனும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் மன உளைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் தோல்வி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் பகை ஏற்படும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பதவி, கௌரவம் உயரும். நிதி ஆதாயம் உண்டாகும். வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அத்தனை சாதகமாக இருக்காது. மூளை சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. அதனால் துன்பம் ஏற்படும். பண இழப்பு காரணமாக நிதி நிலை பலவீனமாக இருக்கும். பரம்பரை சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும்
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சவாலான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் இடியே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். உடல் நலக்குறைவு ஏற்படும். வேலையில் தோல்வி ஏற்படும். வாழ்வாதார இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். பண இழப்பு காரணமாக நிதி நிலை பலவீனமாக இருக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.