இன்று குரு பெயர்ச்சி... மேஷம் முதல் மீனம் வரை... அனைத்து 12 ராசிகளுக்கான பலன்கள்

Guru Peyarchi 2025: இன்று, ஜோதிடத்தின் மிக முக்கிய நிகழ்வாக குரு பெயர்ச்சி நடக்கிறது. சுப கிரகமாக கருதப்படும் குரு குரு பகவான் பொதுவாக சுப பலன்களை வழங்க கூடியவர். கெடு பலன்கள் கொடுக்க மாட்டார். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள்.

குருவின் அருள்பார்வை கிடைத்தால், கோடிக்கணக்கிலான நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இன்று அதாவது, மே மாதம் 14ஆம் தேதி, ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான், மேஷம் முதல் மீனம் வரை, எந்த வகையான பலன்களை கொடுக்கிறார் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1 /13

மேஷம்: அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். வீடு வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். சுப காரியங்களுக்கு பணத்தை செலவு செய்யும் நிலைமை ஏற்படும்.

2 /13

ரிஷபம்: பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இதனால் காரிய சித்தி ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் நிதி நிலைமை மேம்படும்.

3 /13

மிதுனம்: பண வரவு சிறப்பாக இருக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குருவின் அருளால் திருமணம் கைகூடும். ஆசைகள் நிறைவேறும்.

4 /13

கடகம்: ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செயல்கள் நற்பெயரை கொண்டு வந்து சேர்க்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

5 /13

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. வருமானம் பெருகும். அதனால் நிதி பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

6 /13

கன்னி: நிதி சார்ந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீரும் காலம் தொடங்கி விடும். வீடு வாங்கும் கனவுகள் நிறைவேறும். காரிய தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

7 /13

துலாம் நிதிநிலை வலுப்பெறும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எடுத்த காரியங்களில் லாபம் உண்டாகும்.  

8 /13

விருச்சிகம்: உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். இதனால் மன அழுத்தம் உண்டாகலாம். பண விரயம் அதிகரிக்கும்.

9 /13

தனுசு: குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில், தொழிலில் வெற்றி பெறலாம். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

10 /13

மகரம்: முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.. சாதுரியமான முடிவுகள் வெற்றியை கொடுக்கும்.

11 /13

கும்பம்: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உறவில் இணக்கம் உண்டாகும். பண ஆதாயங்களுக்கான வாய்ப்பு உண்டு. எனினும் உடல்நல பிரச்சனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

12 /13

மீனம்: முதலீடுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மன விருப்பம் நிறைவேறும்.

13 /13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.