ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றும். இதை தான் ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். இந்த மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலனையும், சில ராசிகளுக்கு அசுப பலனையும் தரக்கக்கூடும்.
இந்நிலையில் இந்த மே மாதம் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. இது மிகவும் நல்ல பலனைத் தரும். குறிப்பாக குருவின் ராசி மாற்றம் மிகவும் சுப நிகழ்வாகும்.
மே 14, குரு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ராசியில் ஏற்கனவே சந்திரன் இருக்கிறார், அத்தகைய சூழ்நிலையில், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜ்கேசரி ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகம் எந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், செல்வம், கௌரவம் மற்றும் செழிப்பை தரும் என்று பார்ப்போம்.
ரிஷபம்: குருவின் அருளால், நிதி நிலைமை வலுவடையும். நிதி ஆதாயம் உண்டாகலாம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிம்மதியாக இருக்கும்.
கடகம்: மதம் மற்றும் சமூக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணம் செயலாம். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறலாம்.
துலாம்: தொழிலில் விரைவான வளர்ச்சி இருக்கும். பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகலாம்.
தனுசு: சொத்து வாங்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும், செலவுகள் குறையும். வங்கி இருப்பு அதிகரிக்கலாம். மன அமைதியையும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருள் பெற தினமும், 'ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.