வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் சூர்யாவிற்கு கடைசியாக திரையரங்கில் வெளியான எந்த ஒரு படமும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் அவரின் மார்க்கெட்டும் சரிந்துள்ளது.
சூரரைப் போற்று படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு வெளியான எதற்கும் துணிந்தவன் மற்றும் கங்குவா ஆகிய படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் தற்போது சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இவற்றைத் தாண்டி சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வாடிவாசல் படத்தின் அப்டேட்டிற்காக தான். வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த படம் தள்ளிப்போனது.
ஒரு கட்டத்தில் வாடிவாசல் படம் நடக்குமா? நடக்காதா என்ற சந்தேகமும் கோலிவுட் வட்டாரங்கள் முழுவதும் வெளியானது. ஆனாலும் படம் நிச்சயம் நடைபெறும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று வாடிவாசல் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாடிவாசல் படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.