தோனியின் சொல்லப்படாத காதல் கதை.. யாருக்குமே தெரியாது!

Written ByR BalajiUpdated byR Balaji
Published: Jul 07, 2025, 03:33 PM IST|Updated: Jul 07, 2025, 07:02 PM IST

Happy Birthday M.S. Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

1/8

தோனி மற்றும் சாக்ஷி கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். எம். எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற வாழ்க்கை வரலாறு அவர்களின் காதலில் ஒரு வியத்தகு காட்சியாக வழ்ங்கி இருந்தாலும், பல சுவாரஸ்ய மற்றும் எதிர்பாராத நிஜ வாழ்க்கை விவரங்கள் திரையில் காட்டப்படவில்லை. இங்கே இருவரின் உண்மையான காதல் கதையை ஆராய்வோம். 

2/8

தோனியும் சாக்ஷி சிங் ராவத்தும் சிறுவயது நண்பர்கள் என்றம் பின்னர் இருவரும் காதலித்தாகவும் நம்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பெய்யான விஷயம். அவர்களின் தந்தையர் ராஞ்சியில் உள்ள ஓர் நிறுவனத்தில் ஒன்றாக வேலைப்பார்த்திருந்தாலும், தோனி மற்றும் சாக்ஷி வகுப்பு தோழர்களாகவோ அல்லது நெக்கமாகவோ இருக்கவில்லை. 

3/8

தோனியை விட சாக்ஷி 7 வயது இளையவர், சாக்ஷி 1988ஆம் ஆண்டு பிறந்தவர். இருவரின் குடும்பமும் ஒரே மாதிரியான வட்டாரங்களில் இருந்தாலும், சாக்ஷி வெல்ஹாம் என்ற பெண்கள் பள்ளியில் படித்தார். அதற்காக அவர் டேராடூறுக்கு குடிப்பெயர்ந்தார். இதனால், தோனி மற்றும் சாக்ஷி சந்தித்துக்கொள்ளவில்லை. அவர்களின் பாதை மேலும் விலகின. 

4/8

தோனி மற்றும் சாக்ஷி இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் எதிர்பாராதவிதமாக சந்தித்துக்கொண்டனர். இது அவர்களின் காதலுக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. 

5/8

பின்னர் தோனி மற்றும் சாக்ஷி இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டனர். இம்முறை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சந்தித்துக்கொண்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் அவர்கள் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின் பிறகு அவர்களின் பிணைப்பு படிபடியாக வளர்ந்தது.

6/8

2008 ஆம் ஆண்டு தோனியின் பிறந்தநாள் விழாவில் சாக்ஷி கலந்து கொண்டது அவர்களின் வளர்ந்து வரும் பிணைப்பை நுட்பமாக உறுதிப்படுத்தியது. அது அவர்களின் நட்பு உண்மையான உறவாக மாறிய தருணத்தைக் குறித்தது.

7/8

தோனியும் சாக்ஷியும் ஜூலை 4, 2010 அன்று டேராடூனில் திருமணம் செய்து கொண்டனர். விருந்தினர் பட்டியலில் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தனர், ஆனால் கொண்டாட்டம் தனிப்பட்டதாகவும் இதயப்பூர்வமானதாகவும் இருந்தது.

8/8

இந்த ஜோடி பிப்ரவரி 6, 2015 அன்று தங்கள் மகள் ஸிவாவை வரவேற்றது. அவளுடைய வருகை அவர்களின் பயணத்திற்கு அரவணைப்பைச் சேர்த்தது மற்றும் தோனியின் மென்மையான, தனிப்பட்ட பக்கத்தை வெளிப்படுத்தியது.