சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஓய்விற்குப் பிறகு தோனி என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்விற்கு பிறகு தோனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. இருப்பினும் இந்த திட்டங்கள் குறித்து தோனி அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கவில்லை.
இருப்பினும் தனது உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும், அணியின் தேவை குறித்து எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன் என்றும் ஐபிஎல் 2025 போட்டிகள் முடிந்த பிறகு தோனி தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய விரும்புவதாக தோனி தெரிவித்து இருந்தார். அடுத்து கேப்டன் ருதுராஜை வளர்த்து விடுவதில் தோனி மும்முரமாக இருக்கிறார்.
ஐபிஎல் 2025 சீசனுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் தனது ஓய்வு முடிவை குறித்து தற்போது எடுக்க முடியாது என்றும், அந்த சமயத்தில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தோனியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சஸ்பென்சுடன் உள்ளனர். எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு தனது சொந்த ஊரான ராஞ்சியில் சில பைக் ரைடுகளை மேற்கொள்ள உள்ளதாக தோனி தெரிவித்திருந்தார்.