பெண்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்: மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு அப்டேட்

Written BySudharsan G
Published: Apr 25, 2025, 01:40 PM IST|Updated: Apr 25, 2025, 01:40 PM IST

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் விண்ணப்பிக்காமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது கொடுத்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கே மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை1/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது சுமார் 1.14 கோடி குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனர். 

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை2/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இந்த திட்டத்தின் மூலம், பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் இந்த உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. 

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை3/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இத்திட்டத்திற்கு தகுதிவாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர். இதுவரை மூன்று கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்ட தகுதிவாய்ந்த பயனாளர்கள் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி, தகுதிபெறாதவர்களை நீக்கமும் செய்யப்பட்டனர். 

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை4/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இந்நிலையில், பலரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இன்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் இதுவரை இணையாமல் விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை5/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின் (TN CM MK Stalin), வரும் ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது என்றும் அந்த முகாமை பயன்படுத்தி இத்திட்டத்தில் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை6/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் தற்போது குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை7/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை8/8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியில்லை. சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை.