Champions Trophy Final: சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணி மோதுகின்றன. இப்போட்டி நாளை மறுநாள் (மார்ச் 09) நடைபெற உள்ளது.
ஐசிசி தொடரின் அனைத்து விதமான தொடரின் இறுதி போட்டிக்கும் இந்திய அணியை அழைத்து சென்றிருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. இது எந்த அணியின் கேப்டனும் இதுவரை செய்திடாத சாதனையாக உள்ளது. 2023 ஒருநாள் உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று இந்திய அணி தோல்வி அடைந்தது. எனவே இந்த இறுதி போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இறுதி போட்டியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அணியின் கேப்டனும் தொடக்க பேட்ஸ்மேனும் ஆவார் ரோகித் சர்மா. இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இளம் வீரரான சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இவர் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் இவர் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி. ஒன் டவுனில் களம் இறங்குவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட கூடியவர் விராட் கோலி.
ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் களம் இறங்கி விளையாடுவார். இவர் கடந்த ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அணிக்கு கொடுத்தார். அதேபோல், தற்போதும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
தற்போது இந்திய அணிக்கு ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருபவர் அக்சர் பட்டேல். பந்து வீச்சில் ஓர் அளவிற்கு செயல்பட்டாலும், பேட்டிங்கில் நல்ல ரன்களை எடுத்து வருகிறார். இவர் 5வது இடத்தில் களம் இறக்கப்பட்டு வருகிறார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும் விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல் பொதுவாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடியவர். அந்த வகையில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. கடந்த போட்டியில் கூட சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இறுதி போட்டியில் இவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியின் போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதாவது தசை பிடிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் இறுதி போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. ஒருவேளை அவரால் விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா பிளேயிங் 11ல் வர வாய்ப்புள்ளது.
ரவீந்தர ஜடேஜா பீல்டிங், பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கக்கூடிய சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
முக்கிய ஸ்பின்னர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். இவர் நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட்களை குவித்தார்.
வளர்ந்து வரும் ஸ்பின்னர்களில் வருன் சக்கரவர்த்தி முக்கியமானவர். இவர் நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் மூலம் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இவர் நியூசிலாந்துக்கு எதிரான 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், தொடரின் அரை இறுதி போட்டியில் முக்கிய விக்கெட்டான டிரவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி போட்டியின் திருப்பு முனையாக இருந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது ஷமி. இத்தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இடத்தை இவர் நிரப்பி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.