எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...
தேநீர்: பொதுவாகவே தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு, அவ்வளவு நல்லதல்ல என்று உணவில் நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேனீர் என்று அளவில் நிறுத்திக் கொண்டால், பாதிப்பு ஏதும் இருக்காது. அதுவே அளவிற்கு மிஞ்சினால் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேநீர் அருந்தும் போது, அதனுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது, ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும் உணவில் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பியுடன் சில பொருட்களை உட்கொள்வதால், வாயு, அஜீரணம் போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.
பொரித்த கார உணவுகள்: தேநீருடன் பஜ்ஜி, பக்கோடா அல்லது சமோசா போன்ற காரமான, வறுத்த தின்பண்டங்களை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். தேநீரில் உள்ள டானின்கள், காரமான பொரித்த தின்பண்டங்களில் உள்ள கேப்சைசின் உடன் கலக்கும்போது வயிற்று அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முட்டை: தேநீரில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதங்களை பிணைக்கிறது. இதனால், உடலால் அதை உறிஞ்ச முடியாமல் போகலாம். இது புரதக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். அதோடு முட்டையுடன் தேநீர் அருந்துவது வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு, அஜீரணம், வீக்கம், வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மஞ்சள் அதிகம் சேர்த்த உணவுகள்: டீயில் இருக்கும் காஃபின் மஞ்சளுடன் சேரும் போது உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கும். இதனால், வயிற்றில் வாயு, மலச்சிக்கல், வியர்த்தல், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தயிர் கலந்த உணவுகள்: தயிர் சேர்த்த உணவுகளை டீயுடன் சாப்பிடக் கூடாது. தேநீரில் உள்ள டானின் சேர்மங்களுக்கும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்திற்கும் இடையிலான எதிர்வினை வயிற்று வலியை ஏற்படுத்தும். அதோடு தயிர் குளிர்ச்சி தண்மை கொண்டது. தேநீர் சூட்டை கொடுக்கக் கூடியது. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
தண்ணீர்: டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இது கடுமையான அமிலத்தன்மை அல்லது பிற வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் பற்களையும் சேதப்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை டீயுடன் சாப்பிடவே கூடாது. தேநீரில் உள்ள டானின்களும், புளிப்புப் பொருட்களில் உள்ள சிட்ரிக் அமிலமும் சேர்ந்து வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும். டீயுடன் பழச்சாட்டை சாப்பிடக் கூடாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.