பாதாம் பிசின் சாப்பிட்டால் இவ்வளவு நல்லாதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

Written ByR Balaji
Published: Jan 26, 2025, 09:28 AM IST|Updated: Jan 26, 2025, 09:28 AM IST

பாதாம் பிசினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

பாதா மரத்தில் இருந்து பெறப்படும் பாதாம் பிசின் உடலுக்கு குளிச்சியை தருகிறது. இது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது. 

அல்சருக்கு தீர்வு1/7

அல்சருக்கு தீர்வு

பாதாம் பிசின் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, அல்சர், அசிடிட்டி, அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தடுக்கலாம். பாதாம் பிசினில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. 

குளிர்ச்சி தருகிறது2/7

குளிர்ச்சி தருகிறது

தினமும் பாதாம் பிசின் சாப்பிடுவதால் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். 

உடல் எடை அதிகரிக்கும்3/7

உடல் எடை அதிகரிக்கும்

பாதாம் பிசின் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. பாலுடன் கலந்து குடிக்கும்போது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. 

சருமத்தைப் பாதுகாக்கிறது4/7

சருமத்தைப் பாதுகாக்கிறது

பாதாம் பிசின் நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. அதேபோல் வயது மீறிய முதுமைத் தோற்றம், தோல் ஒவ்வாமை உள்ளிட்டவையை தடுக்கிறது. 

நரம்பு மண்டலம் 5/7

நரம்பு மண்டலம்

பாதாம் பிசின் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள், மினரல்கள், புரதச்சத்து ஆகியவை உள்ளன. 

இருதய நோய் 6/7

இருதய நோய்

பாதான் பிசினை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

வெள்ளைப்படுதலுக்கு தீர்வு7/7

வெள்ளைப்படுதலுக்கு தீர்வு

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை பாதாம் பிசின் சரி செய்கிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.