முட்டை கலக்கி பிரியரா? பெரும் ஆபத்து உங்களுக்கு தான்.. மருத்துவர் சொன்ன விஷயம்

Health Risks Of Eating Half Boil : தமிழக மக்களின் பிடித்த உணவான முட்டை கலக்கி சாப்பிடுவதால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர் அருணாச்சலம் கூறியுள்ளார்.

முட்டை கலக்கி சாப்பிடுவதால்,  செரிமான பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம். 

 

 

1 /7

அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக முட்டை இருக்கிறது. குறைந்த விலையில், உடலுக்கு அதிகப்படியான ப்ரோட்டீன் தருவதால், மக்கள் முட்டையை பிரதான உணவாக சாப்பிட்டு வருகின்றனர். முட்டையை வேக வைத்தும், ஆம்லெட் போட்டும் சாப்பிட்டு வருகின்றனர். 

2 /7

அந்த அளவுக்கு பலருக்கும் முட்டை பிடித்த உணவாக இருக்கிறது. முட்டையில் வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, முட்டையை தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த சத்துக்களும் கிடைக்கும். ஆனால், முட்டையை சரியாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

3 /7

முட்டையை முழுமையாக வேகவைத்தும் அல்லது பொடிமாஸ் செய்து சாப்பிடலாம். முட்டையை நன்கு வேகவைத்து சாப்பிடுவது நல்லது என்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் முட்டையை ஆப் பாயில், கலக்கி, பச்சையாக குடிப்பது போன்றவையை செய்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டலிலும் முட்டை கலக்கியை மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 

4 /7

முட்டை கலக்கி இங்கு பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. ஆனால், இந்த முட்டை கலக்கி சாப்பிடுவது பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என கூறுகின்றனர். இந்த நிலையில், முட்டை கலக்கி சாப்பிடுவது குறித்து மருத்துவர் அருணாச்சலம் முக்கிய தகவலை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

5 /7

முட்டை கலக்கி குறித்து அவர் பேசுகையில், "கோழிப்பண்ணையில் இருந்து வரும் முட்டைகளில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவான தொற்று இருக்கிறது. இது டைபாய்டு காய்ச்சலை வர வைக்கிறது. எனவே, முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். கலக்கி, half boil போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது யாருக்குமே நல்லது கிடையாது.

6 /7

முட்டை கலக்கி, half boil சாப்பிடுவது வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதோடு, typhoid காய்ச்சலையும் ஏற்படுத்தக் கூடும். நன்றாக வேகவைத்த உணவு எதுவும் செய்யாது. முட்டையை ஹாப் பாயில், கலக்கி, பச்சையாக குடிப்பது போன்றவற்றில் கிரிமி தொற்று ஏற்படுத்துவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அதனை சாப்பிடுவதை தவிர்க்கவும்" என்று கூறியுள்ளார்.

7 /7

முட்டையில் இருக்கக் கூடிய அதிகப்படியான சத்துக்கள் உடலில் சேருவதற்கு அதனை நன்கு வேகவைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடலுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.