கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
ஓட்ஸ்: உடலில் கொல்ஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸில் பல வித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதோடு கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக அகற்றும் பண்புகளும் இதில் உள்ளன.
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை ஒரு முக்கியமான மசாலா ஆகும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் இலவங்கப்பட்டை டீ குடிப்பது அதிக கலோரிகளை எரிக்கவும், கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
பாதாம், அக்ரூட் பருப்புகள்: பாதாமும் அக்ரூட் பருப்புகளும் ருசியான உலர் பழங்கள்ளாக இருப்பதோடு, இவற்றில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இவற்றை முறையாக உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உடலை விட்டு நீக்க உதவும்
மீன்: சால்மன் போன்ற மீன் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன.
காய்கள்: பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும். தினமும் காய்கறி சாலட் உட்கொள்வது நன்மை பயக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை பயன்படுத்துவது நல்லது.
மஞ்சள்: மஞ்சள் உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் எரிக்கப்படுகின்றன. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் உள்ள குர்குமின் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.