Tamil Nadu Rain: தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், நாளை (செப். 7) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Chennai Meterological Centre: சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் அடுத்த 7 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை இன்று மதியம் (செப். 6) வெளியிட்டது. இதன்படி, செப். 6 முதல் செப். 11 வரையில் எந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
1/8தமிழ்நாட்டில் நேற்று (செப். 5) காலை 8.30 மணிமுதல் இன்று (செப். 6) காலை 8.30 மணிவரை, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Centre) தெரிவித்துள்ளது. (Image Source: Meta AI)
2/8இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த சில நாள்களில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம். (Image Source: Meta AI)
3/8இன்று (செப். 6): வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Image Source: Meta AI)
4/8செப். 7: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. (Image Source: Meta AI)
5/8செப். 8: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. (Image Source: Meta AI)
6/8செப். 9: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. (Image Source: Meta AI)
7/8செப். 10: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப். 11, செப். 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Image Source: Meta AI)
8/8சென்னையை பொருத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Image Source: Meta AI)