மே 14, 15ம் தேதிகளில் இந்த 10 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம்!

தமிழகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம். 

தமிழகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம். 

1 /5

தமிழகத்தில் வரும் மே 14, 15ஆம் தேதிகளில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

2 /5

இது தொடர்பாக நேற்று (மே 11) சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 13ம் தேதி துவங்கக்கூடும்.

3 /5

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மே 13ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 /5

நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மே 14,15ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 /5

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.