தொப்பையை குறைக்க வேண்டுமா? சிறந்த 6 வழிகள் இதோ!

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பலருக்கு தொப்பை போடுவது வழக்கம். அந்த தொப்பையை நாம் வீட்டில் செய்யும் வேலைகள் மூலமாகவே குறைக்கலாம். இந்த நிலையில், அது என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பலருக்கு தொப்பை போடுவது வழக்கம். அந்த தொப்பையை நாம் வீட்டில் செய்யும் வேலைகள் மூலமாகவே குறைக்கலாம். இந்த நிலையில், அது என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /6

தினமும் முதலில் கொஞ்ச நேரமாவது வேகமாக நடக்க பழக வேண்டும். இந்த பழக்கம் தொப்பை கொழுப்பை கரைக்க உதவும். மேலும், இந்த நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவும்.

2 /6

படிகட்டுகளில் ஏறி இறங்குவது தட்டையான இடங்களில் நடப்பதை விட மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிக்க உதவும். அதேபோல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சோர்வை குறைக்கும். குறிப்பாக இந்த பயிற்சி தொப்பையை குறைக்க சிறந்த வழி ஆகும். 

3 /6

தொப்பையை குறைக்க வீட்டு வேலைகளில் ஈடுபடலாம். வீட்டை பெருக்குவது துடைப்பது துணிகளை துவைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்யலாம். இது போன்ற வேலைகள் தொப்பையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். 

4 /6

தினமும் காலை எழுந்தவுடன் யோகாவில் ஈடுபடலாம். யோகா என்பது மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகிய அனைத்தும் கலந்து சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது நம்முடைய உடலை சீராக வைத்திருப்பதோடு மன அழுத்தத்தை குறைக்கும். 

5 /6

நீச்சல் என்பது ஒரு முழு உடற்பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை தினமும் மேற்கொண்டால் மூச்சு திணறல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று முறை 30 முதல் 45 நிமிடங்களாவது நீச்சல் பயிற்சி மேற்கொள்ளவும். 

6 /6

சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது தொப்பையை குறைக்க உதவும். மேலும், ஓடுவது மற்றும் சைக்கிளிங் செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்  மேம்படுத்துகிறது.