ஆசிய கோப்பை 2025: யுஏஇ-க்கு எதிரான போட்டி.. இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

Written ByR BalajiUpdated byR Balaji
Published: Sep 09, 2025, 09:00 PM IST|Updated: Sep 09, 2025, 09:00 PM IST

Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் இன்று (செப்டம்பர் 09) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி உள்ளது. 

1/11

கடந்த சில காலமாக டி20 அணியின் தொடக்க வீரராக அசத்தி வரும் அபிஷேக் சர்மா, இத்தொடரிலும் தொடக்க வீரராக களம் இறங்குவார். 

2/11

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுப்மன் கில், டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடர்களில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி இருக்கிறார். 

3/11

இடது கை வீரரான திலக் வர்மா இத்தொடரில் ஒன்-டவுனில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

4/11

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 4வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது. 

5/11

சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடும் சிவம் துபே இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்   5வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6/11

இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தக்கூடியவர். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு இவரது பங்கு முக்கியமாக இருந்துள்ளது. இவர் இத்தொடரில் 6வது இடத்தில் களமிறங்குவார். 

7/11

சமீப காலமாக இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார் அக்சர் படேல். இவரை இந்திய அணி வருண் சக்கரவர்த்திக்கு உதவியாக இரண்டாவது சுழற்பந்து வீச்சில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8/11

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் இவர் நமது கணிப்பில் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். இவர் களமிறக்கப்பட்டால், ஃபினிஷராக பயன்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

9/11

இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரும் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார். எனவே இவர் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் இடம் பெறுவார். 

10/11

இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இவரும் அனைத்து போட்டிகளில் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

11/11

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார். இவர் இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.