40-ஐ கடந்தும் சிங்கிளாக சுற்றும் நடிகர்கள்!! லிஸ்டு ரொம்ப பெருசு..

40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாத நடிகை மற்றும் நடிகர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

சினிமாவில் பிரபலமான தம்பதிகள் பலர் உள்ளனர். உதாரணத்திற்கு சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சிநேகா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மத்தியில் பிரபல நடிகை, நடிகர்கள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 /5

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் படையை கொண்டுள்ளவர் சிம்பு. சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நடிகரின் படம் வெளியாகி முன்பை போலவே வரவேற்பு பெற்றது என்றால் அது நடிகர் சிம்பு தான்.  இவருக்கு பின்னால் எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் இருந்தாலும், தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு வயது 42. 

2 /5

தமிழ் சினிமாவின் நடிகரான விஷால் 47 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் நின்றுவிட்டது. 

3 /5

பாகுபலி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ். இவரது வயது 42 ஆகிறது. அனுஷ்கா கிரித்தி சனோன் ஆகியோருடன் கிசுகிசுக்கள் வந்தன. இருப்பினும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

4 /5

தமிழ் சினிமாவில் 20 வருடங்களை கடந்தும் நடிகையாக நிலைத்து வருபவர்களில் ஒருவர் திர்ஷா. இவர் 42 வயதை கடந்து உள்ளார். இவருக்கு பிரபல தொழிலதிபருடன் நிச்சயம் ஆன நிலையில், திருமணம் நின்றுவிட்டது. 

5 /5

தமிழ் சினிமாவில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இந்த நிலையில், 43 வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.