கிரிக்கெட்டில் இத்தனை வகையான டக்-அவுட்டா? முழு பட்டியல் இதோ!

கிரிக்கெட்டில் மொத்தம் 9 வகையான டக் அவுட்கள் உள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /9

ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தால் அது கோல்டன் டக் கூறப்படுகிறது. 

2 /9

பேட்டிங் ஹாட்ரிக் என்பது அதிகாரப்பூர்வமான சொல் அல்ல, ஆனால் சில நேரங்களில் ஒரு பேட்டர் வெவ்வேறு இன்னிங்ஸ் அல்லது போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று கோல்டன் டக் ஆனால் அது பேட்டிங் ஹாட்ரிக் என சொல்லப்படுகிறது. 

3 /9

ஒரு பேட்டர் எதிர்கொள்ளும் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தால், அது சில்வர் டக் எனப்படும்.

4 /9

ப்ரான்ஸ் டக் என்பது ஒரு பேட்டர் எதிர்கொள்ளும் மூன்றாவது பந்தில் எந்த ரன்களும் எடுக்காமல் அவுட்டாவதைக் குறிக்கிறது.

5 /9

ஒரு பேட்டர் பந்தையே எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தால் அது டைமண்ட் டக் என கூறப்படுகிறது. அதாவது ஆஃப் ஸ்ட்ரைக்கில் இருக்கும்போது ரன் அவுட் ஆவது ஆகும். 

6 /9

ராயல் டக் என்பது பொதுவாக தி ஆஷஸ் (இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்) போட்டியின் போது பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டு சொல். இது போட்டியின் அல்லது தொடரின் முதல் பந்திலேயே ஒரு பேட்டர் ஆட்டமிழப்பதை விவரிக்கிறது. 

7 /9

லாஃபிங் டக் என்பது ஒரு பேட்ஸ்மேன் பூஜ்ஜியத்திற்கு ஆட்டமிழந்து, அவரது ஆட்டமிழப்பு இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் சூழ்நிலையைக் குறிக்கிறது. 

8 /9

டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனால் அது பேர் டக் என கூறப்படுகிறது. 

9 /9

ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் (அதாவது, இரண்டு இன்னிங்ஸ்களிலும் முதல் பந்தில்) ஒரு பேட்டர் கோல்டன் டக் ஆக ஆட்டமிழக்கும் போது அது கிங் டக் என கூறப்படுகிறது.