FD திட்டம்: வட்டியை அள்ளித் தரும் இந்த 5 சிறு நிதி வங்கிகள் - நோட் பண்ணுங்க!

Written BySudharsan G
Published: Sep 11, 2025, 07:04 PM IST|Updated: Sep 11, 2025, 07:04 PM IST

FD திட்டங்களின் வட்டி விகிதம் தொடர் மாற்றம் செய்யப்படும் நிலையில், தற்போது இந்த 5 சிறு நிதி வங்கிகள் FD-க்கு அதிக வட்டியை கொடுக்கின்றன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

FD Schemes: நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) என்பது ஒரு பெரிய தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் டெபாசிட் செய்வதாகும். அந்த தொகைக்கு குறிப்பிட்ட வட்டி விகிதம் விதிக்கப்படும். இதன்மூலம், நீங்கள் வட்டி வருவாயை பெறுவீர்கள்.

 

நிலையான வைப்புத்தொகை1/8

நிலையான வைப்புத்தொகை

FD திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டும் வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி, பணவீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் FD வட்டி விகிதத்தில் தாக்கம் செலுத்தும். 

 

நிலையான வைப்புத்தொகை2/8

நிலையான வைப்புத்தொகை

அந்த வகையில், தற்போது பல வங்கிகள் FD-க்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளன. அதன்படி, இந்த 5 சிறு நிதி வங்கிகளில் FD திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வங்கிகளை இங்கு காணலாம்.

 

நிலையான வைப்புத்தொகை3/8

நிலையான வைப்புத்தொகை

சூர்யோதய  ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank): 5 ஆண்டுகள் FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 8.20% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.40% வட்டி ஆகும். இது செப்டம்பர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  

 

நிலையான வைப்புத்தொகை4/8

நிலையான வைப்புத்தொகை

ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank): 5 ஆண்டுகள் (1825 நாள்கள்) FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்கள், மூத்த குடிமக்கள் இருவருக்கும் 8% வட்டி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

 

நிலையான வைப்புத்தொகை5/8

நிலையான வைப்புத்தொகை

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Equitas Small Finance Bank): 888 நாள்கள் FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.40% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டியும் வழங்கப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.   

 

நிலையான வைப்புத்தொகை6/8

நிலையான வைப்புத்தொகை

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Utkarsh Small Finance Bank)2-3 ஆண்டுகள் FD திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 8.15% வட்டியும், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.65% வட்டியும் வழங்கப்படுகிறது. இது கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. 

 

நிலையான வைப்புத்தொகை7/8

நிலையான வைப்புத்தொகை

ஸ்லைஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Slice Small Finance Bank): இந்த வங்கியில் 18 மாதம் 1 நாள், 18 மாதம் 2 நாள் FD திட்டங்களுக்கு 8.50% வட்டி வழங்கப்படுகிறது. இது பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருதரப்புக்கும் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.

 

நிலையான வைப்புத்தொகை8/8

நிலையான வைப்புத்தொகை

பொறுப்பு துறப்பு: இவை FD திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதம் குறித்த தகவல்களை வாசகர்களுக்கு தெரிவிக்கவே எழுதப்பட்டதாகும். இது முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல. எனவே, இத்திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் உங்களின் நிதி சார்ந்த ஆலோசகரிடம் உரிய ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.