Highest Paid Actress In India : இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Highest Paid Actress In India : இந்திய சினிமாவை பொருத்தவரை, நடிகைகளை விட எப்போதும் நடிகர்களுக்குதான் சம்பளமானது அதிகமாக இருக்கும். இப்போதுதான் கடந்த சில வருடங்களாக ஹீரோவிற்கு இணையாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டுமென சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்பது குறித்த விவரம், தற்போது வெளிவந்து இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நடிகை, திரையுலகிற்கு வந்ததே ஒரு தமிழ் படத்தின் மூலமாகத்தான். ஆனால், அதன் பிறகு இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
கோலிவுட்டை பொருத்தவரை, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் இருக்கின்றனர். இவர்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தால், அதற்கு ஏற்றவாறுதான் தங்களது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.
வழக்கமாக, தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் வட இந்திய நடிகைகளுக்குதான் சம்பளமானது அதிகமாக இருக்கும். அப்படி, இதுவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால், அவர்களையும் இந்த நடிகை முந்தியிருக்கிறார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை, பிரியங்கா சோப்ராதான். இவர் முதன் முதலில் நடித்த படம், விஜய் ஹீரோவாக நடித்திருந்த ‘தமிழன்’ தான். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்ற இவர், பின்னர் ஹாலிவுட்டிற்கும் சென்று விட்டார்.
ராஜமௌலி, தற்போது ‘வாரணாசி’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ எனும் கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இதற்காக வெளிநாட்டில் உள்ள பிரியங்கா, இந்தியாவிற்கு வந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா, வாரணாசி படத்தில் நடிப்பதற்காக சுமார் ரூ.30 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர், தன் முதல் படத்திற்கு ரூ.5 லட்சத்தை சம்பளமாக வாங்கியதாகவும், இப்போது 30 கோடி அளவிற்கு அவரது மார்கெட் பெரிதாக உயர்ந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஹாலிவுட்டில் இப்போது பிரபல முகமாக வலம் வரும் பிரியங்கா, 2018ல் நிக் ஜோனஸ்ஸை திருமணம் செய்த பின்பு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட்டிலும், ஆண் நடிகர்களுக்கு இணையாக பெண் நடிகர்கள் சம்பளம் வாங்குவதில்லை என்று சுட்டிக்காட்டி வரும் பிரியங்கா, அதை தன் படங்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.