EMI சுமையை குறைக்க எளிய வழி..குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்! எப்படி தெரியுமா?

Home Loan Advisory Low Cost EMI : இந்தியாவை பொருத்தவரை, பலரது நடுத்தர மக்களின் கனவாக இருப்பது ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். இப்படி வீடு வாங்குவது அனைவருக்கும் எளிதான காரியம் அல்ல. இதற்கு, நாம் வங்கியில் வட்டிக்கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். 

Home Loan Advisory Low Cost EMI : வங்கி கடனை, வட்டி மாற்றத்தை தீர்மானிப்பதாக இருப்பது, ரெப்போ விகிதம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய ரிசர்வ் வங்கி, சமீபத்தில் 5.50% ஆக இருந்த ரெப்போ விகிதத்தை 5.25ஆக குறைத்திருக்கிறது. இதனால், என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இங்கு பார்ப்போம். 

1 /7

ரெப்போ விகிதத்தின், 0.25% குறைப்பு என்பது பொதுமக்கள் கடன்களுக்கான வட்டியில் இருந்து சராசரியாக நிவாரணத்தை உருவாக்கும் என நிதி நிபுணர்கள் பலர் மதிப்பீடு செய்கின்றனர். இது குறையும் போது, வங்கிகளின் கடன் பெறும் செலவும் குறையும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது. 

2 /7

வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற வற்றில், இந்த ரெப்போ விகித குறைவு தாக்கத்தை ஏற்படுத்துவதால் புதிய கடன் பெற திட்டமிடுவர்களுக்கு இது சிறந்த சந்த்ர்பமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே, வங்கிகள் தங்கள் கடன் வட்டிகளை திருத்தம் செய்ய ஆரம்பித்துள்ளன.

3 /7

இதற்கு உதாரணமாக, பேங்க் ஆஃப் பரோடா சுமார் 7.40% வட்டியில் கடனை வழங்குகிறது. இதையடுத்து, யூனியன் வங்கி சுமார் 7.45% மற்றும் கரூர் வைஸ்யா வங்கியில் 7.60% வரை வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது. 

4 /7

இந்த வட்டி வரம்புகள் குறைந்திருப்பதால், நீண்ட கால EMI கடன் பெறுபவர்களுக்கு சேமிப்பு அதிகமாகலாம். ஏற்கனவே கடன் வாங்கியவர்களும், ரீசெட் தேதியின் போது குறைந்த வட்டியால் நன்மை பெற்ற வாய்ப்பிருக்கிறது. 

5 /7

வீட்டுக்கடன் தேவைக்கான வாய்ப்பு, இனி அதிகம் ஆகும் என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வட்டி குறைப்பால், EMI குறைவதோடு, வீட்டு செலவுகளையும் திறம்பட திட்டமிடலாம் என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யவும் இது சரியான தருணம் என்று தெரிவிக்கின்றனர். 

6 /7

வருங்காலத்தில் வீட்டுக்கடன் தேவை அதிகமாகும் என்பதால் சொத்து விலையும் உயரக்கூடுமாம். எனவே, இப்போது வட்டி குறையும் போதே அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். 

7 /7

இந்த ரெப்போ விகித குறைவால், உயர்ந்த கடன் தொகையை வைத்திருப்பவர்களும் கூட பயணடைகின்றனர். எப்படி என்றால், அவர்கள் வைத்திருக்கும் கடன் தொகைக்கு வட்டி கணிசமாக குறையும். இதனால் அவர்களும் பயன் பெறுவார்கள் என்பது உறுதி.