ரூ.20 லட்சம் வீட்டுக் கடன்... கடன் முடியும்போது கையில் ரூ.24 லட்சம் - அது எப்படி?

Home Loan: 15 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள் என்றால், கடன் காலம் முடியும்போதே தனியாக உங்கள் கையில் சுமார் ரூ.24 லட்சம் சேமிப்பு வருவதற்கு ஒரே அருமையான வழி இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம். 

Home Loan Full Recovery: வீட்டுக் கடனை நீண்ட காலம் செலுத்த வேண்டும் என்பதால், நீங்கள் வீட்டுக் கடனை ஆரம்பிக்கும் முதல் மாதத்தில் இருந்து கடைசி மாதம் வரை SIP-ல் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அந்த தொகையை கணக்கீடு செய்வது எப்படி?, அதை திட்டமிடுவது எப்படி? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

1 /8

வீட்டுக்கடன் என்பது நீண்ட காலத்திற்கானது. அதிக தொகைக்கு நீங்கள் கடன் வாங்கி, அதற்கு பல ஆண்டுகள் நீங்கள் தவணை மூலம் திருப்பிச் செலுத்திவீர்கள். இதில் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாகும்போது, மாதத் தவணை குறைவாக இருக்கும், ஆனால் உங்கள் கையில் இருந்து போகும் வட்டித்தொகை அதிகமாக இருக்கும்.  

2 /8

உதாரணத்திற்கு நீங்கள் ரூ.20 லட்ச  ரூபாயை வங்கியில் இருந்து வீட்டுக் கடனாக வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு வட்டி விகிதம் தற்போது நிலவரப்படி 9.55% என வைத்துக்கொள்வோம். இதனை 15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்றால், கடன் முடியும்போது மொத்தமாக நீங்கள் ரூ.37,83,600 செலுத்தியிருப்பீர்கள். அதாவது வட்டி மட்டும் ரூ.17,83,600 கட்டியிருப்பீர்கள்.   

3 /8

அதுவே, இதே வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் கடன் 20 ஆண்டுகளில் செலுத்தினால் மொத்தம்  மொத்தமாக நீங்கள் ரூ.45,18,000 செலுத்தியிருப்பீர்கள். அதாவது வட்டி மட்டும் ரூ.25,18,000 கட்டியிருப்பீர்கள். 25 ஆண்டுகள் என்றால் ரூ.52,92,300 செலுத்துவீர்கள், வட்டி மட்டும் ரூ.32,92,300 ஆகும்.  

4 /8

இதையே நீங்கள் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்றால் மொத்தம் ரூ.₹30,84,960, அதாவது வட்டி ரூ.10,84,960 மட்டும்தான். எனவே, நீங்கள் குறைந்த ஆண்டுகளில் கடனை திருப்பிக்கொடுத்தால் வட்டி குறையும்.   

5 /8

அதேநேரத்தில், நீங்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் முதல் மாதத்தில் இருந்து, கடைசி மாதம் வரை தனியாக SIP-ல் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மொத்த வீட்டுக் கடனையும் திரும்பிப்பெறலாம்.  

6 /8

அதாவது உங்களின் மாதத் தவணை தொகையில் 25% சதவீத தொகையை தனியாக நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும். ரூ.20 லட்சம் கடனை 9.55% வட்டியில் 15 ஆண்டுகளுக்கு வாங்கினால் அதன் மாதத் தவணை ரூ.20,945 ஆகும். இதன் 25% என்பது ரூ.5,236 ஆகும்.  

7 /8

நீங்கள் 15 ஆண்டுகள் ரூ.5,236 தொகையை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12% வட்டி கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகளில் ரூ.9,42,480 முதலீடு செய்திருப்பீர்கள். மொத்தம் ரூ. 24,33,000 கிடைக்கும். அதாவது வட்டி வருவாய் மட்டும் ரூ.14,90,520 ஆகும். உங்களின் வீட்டுக் கடன் தொகையை இதன்மூலம் நீங்கள் வசூலித்துவிடலாம்.  

8 /8

மாதத் தவணையில் 25% முதலீடு செய்வது சற்று அதிகமாக தோன்றலாம். அப்படியிருக்க ஆரம்பத்தில் 5%, அடுத்தாண்டு 10%, அதற்கடுத்த ஆண்டு 15% என குறைந்தது ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக முதலீட்டை அதிகப்படுத்தினால் 15 ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகை உங்களிடம் வந்துசேர்ந்துவிடும். எனவே, வீட்டுக் கடன் வாங்கும் மக்கள் இதையும் சேர்த்து கணக்கிடுங்கள்.