தமிழகத்தில் இதுவரை நடந்த ஆணவக் கொலைகள்! இத்தனை உயிர்கள் பறிபோனதா?

Written ByThirishala S.P
Published: Aug 02, 2025, 04:36 PM IST|Updated: Aug 04, 2025, 02:51 PM IST

Honour Killings In TN: இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஆணவக் கொலைகள், காதலுக்கும், வாழ்க்கைக்கும் எதிரானது என்பதை காட்டுகின்றன. சாதி, மதம், மரபு எனும் காரணங்களால் பல காதலர்களின் கனவுகள் நசுங்கிவிட்டன. இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்பட வேண்டும் என்பதே பெரிய கேள்வி???

Honour Killings In TN: இது ஒருவரின் காதலை ஏற்க மறுப்பது மட்டும் அல்ல, மனிதநேயத்தையே மறுக்கும் செயல். சாதி மறுப்பதோடு, காதலையும் மரணமாக்கும் சமூக நிலை எப்போது மாறும்?மனித நேயம் மேலோங்கும் நாள் எப்போது வரும்? இதுதான் இன்றைய வலியுறுத்தல்.

Kannagi murugesan1/8

கண்ணகி - முருகேசன்:

கண்ணகி - முருகேசன்: 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் கண்ணகி மற்றும் முருகேசன் இருவரும் சாதி வெறிக்கு பலியாகக் கொல்லப்பட்டனர். வன்னியர் சமூகத்தை சேர்ந்த கண்ணகியும், தலித் சமூகத்தை சேர்ந்த முருகேசனும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், கண்ணகியின் குடும்பத்தினரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 2025 ஏப்ரல் 28ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது.

Ilavarasan divya2/8

இளவரசன் - திவ்யா:

இளவரசன் - திவ்யா: தர்மபுரியில், தலித் இளவரசன் உயர் சாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்ததால், பெரும் கலவரம் உருவாயிற்று. இளவரசன் மரணத்திற்கு நீதியும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் இன்னும் உறுதியாகவில்லை. பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களது குற்றம் உறுதி செய்யப்படவில்லை.

gokulraj swathi3/8

கோகுல்ராஜ் - சுவாதி:

கோகுல்ராஜ் - சுவாதி:  2015ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று, நாமக்கல்லில் தலித் இளைஞர் கோகுல்ராஜ், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சுவாதியுடன் நட்பில் இருந்ததால் யுவராஜ் மற்றும் அவரது அமைப்பினர் கடத்தி கொலை செய்தனர். இது ஒரு சாதி அடிப்படையிலான மரியாதைக்கொலை. வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மன அழுத்தத்தில் தற்கொலை செய்தார். பல தரப்புகள் சிபிஐ விசாரணைக்காக வலியுறுத்தினாலும், அரசு அவசியமில்லை என மறுத்தது. உயர் நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்தது.

Kowsalya shankar4/8

கெளசல்யா - சங்கர்:

கெளசல்யா - சங்கர்: 2016-ல் திருப்பூரில், தலித் இளைஞர் சங்கர், தேவர் சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யாவை காதலித்து திருமணம் செய்ததால், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி ஏற்பாடு செய்தவர்கள் சங்கர் மற்றும் கெளசல்யாவை பகலில் கத்தியால் தாக்கி கொலை செய்தனர். கௌசல்யா படுகாயங்களுடன் உயிர்தப்பினாள். ஆரம்பத்தில் ஆறு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் சின்னசாமிக்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவித்து, மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த வழக்கு, தமிழ்நாட்டில் சாதி கொலை பற்றிய பெரும் விவாதத்தை உருவாக்கியது. கௌசல்யா சமூக நீதிக்காக போராடி வருகிறார்.

Sureshkumar5/8

சுரேஷ்குமார்:

சுரேஷ்குமார்: கன்னியாகுமரியில் தலித் இளைஞர் சுரேஷ்குமார் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். உயர்சாதி பெண்ணுடன் காதலில் இருந்ததால், அவரது சகோதரர்கள் பயங்கர அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகிறது. போலீஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிறகு, அவர் விஷம் அருந்தி மரணம் அடைந்ததாக அரசு மருத்துவமனை தெரிவித்தது. ஆனால் குடும்பத்தினர் இது ஆணவக் கொலை எனக் கூறி, நடவடிக்கை வேண்டும் என்று மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Mariselvam karthiga6/8

மாரிசெல்வம் - கார்த்திகா:

மாரிசெல்வம் - கார்த்திகா: தூத்துக்குடியில் காதலித்து திருமணம் செய்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா என்ற புது மன தம்பதிகள், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் உத்தரவின்படி அவரது உறவினர்கள் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டனர். திருமணத்திற்கு எதிராக இருந்த குடும்பம் இந்த கொலைக்கு திட்டமிட்டதாக போலீஸார் கூறினர். மூன்று பேர் கைது செய்யப்பட்டு, மற்ற மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். இது ஆணவக்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kavin subashini8/8

கவின் - சுபாஷினி:

கவின் - சுபாஷினி: திருநெல்வேலியில், 27 வயது தலித் இளைஞர் கவின் செல்வகணேஷ் தனது காதலி வீட்டாரால் கத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் சுபாஷினி தேவர் சமூகத்தை சேர்ந்தவர். அவரது சகோதரர் சுர்ஜீத், பேச அழைத்து வெளியே கொண்டு வந்து கத்தியால் வெட்டியுள்ளார். போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுர்ஜீத் மீது Goondas Act உள்பட பல சட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள்; அவர்கள் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சமூகத்தை சேர்ந்த கவினின் குடும்பம், பெண்ணின் பெற்றோர்களும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த ஆணவக்கொலை மாநிலம் முழுவதும் கண்டனம் கிளப்பியுள்ளது.