வேகமாக உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு 7,000 முதல் 10,000 படிகள் வரை நடக்க வேண்டும் அதாவது இது 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை நடை பயிற்சிக்கு சமமாகும்.
இந்த தூரத்தை நீங்கள் தினமும் நடப்பதன் மூலம் உங்களின் இதயத்துடிப்பு உயர்கிறது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது.
அதே சமயம் நல்ல வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது அதிக கலோரிகளையும் கொழுப்புகளையும் எரிக்க உதவுகிறது.
இந்த நடை பயிற்சி உடன் ஆரோக்கியமான உணவுகளை இணைத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.
நீங்கள் தினமும் இந்த தூரத்தை மேற்கொண்டால் இதயத்துடிப்பு அதிகரிப்பதோடு தசைகளை மெல்லியதாக வைத்திருக்கவும் நிலையான எடை இழப்புக்கு பங்களிக்கும்.