CM Vijay Belt Price Latest: முதல்வர் விஜய் அணியும் பெல்டின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் இந்த பெல்ட்டை தேர்வு செய்ததற்கான முக்கிய காரணங்களும் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.
1/5தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே வெள்ளை சட்டை, கருப்பு கோட் அணிந்து வருகிறார். திட்டங்கள் தொடங்கி வைப்பது என அரசு நிகழ்ச்சிகளுக்கு கருப்பு நிற கோட் சூட்டில் தான் வலம் வருகிறார். இந்த உடையிலேயே தான் பலரையும் அவர் சந்தித்து வருகிறார்.
2/5முதல்வர் விஜய் அணியும் கோட், வெள்ளை சட்டை போன்றவை அவரது ஆதரவாளர்களையும், ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் விஜய் அணிந்திருக்கும் பெல்ட் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விஜய் அணியும் பெல்ட்டின் விலை உள்ளிட்டவை குறித்து தகவல் கசிந்துள்ளது
3/5முதல்வர் விஜய் அணிந்திருக்கும பெல்ட், லூயிஸ் விட்டன் (Louis Vuitton) நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த பெல்ட்டின் முகப்பில் LV என்ற எழுத்துக்கள் இருக்கும. லூயிஸ் விட்டன் பெல்ட்டின் விலைகள் ரூ.60,000 முதல் ரூ.1.14 லட்சம் வரை இருக்குமாம். விஜய் அணிந்திருக்கும் பெல்ட்டின் விலை ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என தகவல் கசிந்துள்ளது.
4/5பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில்உ ள்ள லூயி விட்டான் நிறுவனத்தின் பட்டறைகளில் இருந்து இந்த பெல்ட் உருவாக்கப்பட்டது. இந்த பெல்ட்டின் தோல் மெட்டீரியல் பல ஆண்களுக்கு தேயாமல் உழைக்கும். இந்த பெல்ட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமே இரண்டு பக்கமும் மாற்றி அணிந்து கொள்ளலாம். ஒருபுறம் லூயிஸ் விட்டன் பிராண்டின் பாரம்பரிய அடையாளமான டேமியர் அல்லது மோனோகிராம் கேன்வாஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மறுபுறம் திருப்பினால், நேர்த்தியான ஃபார்மல் உடைகளுக்கு ஏற்ற, சாதாரண கருப்பு நிறத்தில் பெல்ட் இருக்கும்.
5/5விஜய் போன்ற பிரபலங்கள் லூயிஸ் விட்டன் பெல்ட்டை அணிவதற்கு இதுவே காரணம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட தோற்றங்களை கொண்டுள்ளதால் பிரபலங்கள் இந்த பெல்ட்டை வாங்குகின்றனர். இதனை, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.