கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த குடும்பங்களுக்கு மட்டும் மாதம் ரூ.4000 - எப்படி?

Published: Jul 27, 2025, 11:11 AM IST|Updated: Jul 27, 2025, 11:11 AM IST


Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்ந்து எந்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.4000 கிடைக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துடன் சேர்த்து அரசின் இன்ன பிற திட்டங்களில் பயனாளிகளாக இருக்கும் குடும்பங்கள் மாதம் 4000 ரூபாய் வரை பெற முடியும்.

1/9

தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு பெண்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். ஏனென்றால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 மாதந்தோறும் வழங்குகிறது.

2/9

கடந்த முறை விடுபட்டவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளுக்குள் வருபவர்கள் என அந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் இப்போது இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

3/9

இதுதவிர அரசு கொடுத்திருக்கும் புதிய தளர்வுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழாக பெறும் குடும்பத்தினரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்களில், அதாவது புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து அரசு விரைவில் ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது.

4/9

இது ஒருபுறம் இருக்க, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thittam) பயனாளியாக இருப்பவர்கள் குடும்பத்தினர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இது எல்லா குடும்பங்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும்.

5/9

அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து அரசின் இன்னபிற திட்டங்களின் மூலம் அந்த குடும்பத்தினர் பயன்பெறுபவர்களாக இருப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இருப்பார்.

 

6/9

அவருக்கு அரசுப் பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் மகள் மற்றும் மகன் இருந்தால் இருவரும் புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Pen Thittam), தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் வழியாக மாதம் தலா ரூ.1000 பெறுவார்கள்.

7/9

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து இப்போது கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

8/9

இதுதவிர முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.1000 பெறும் மூத்தக்குடிமக்கள் அக்குடும்பத்தில் இருந்தால், தமிழ்நாடு அரசின் மாதாந்திர நிதியுதவியால் மட்டும் ரூ.4000 பெற முடியும்.

9/9

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தில் மேலே சொல்லப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் (Tamil Pudhalvan Thittam), முதியோர் ஓய்வூதியம் (Senior Citizen pension) பெறும் பயானிகள் இருப்பின் நிச்சயமாக ரூ.4000 தவறாமல் கிடைக்கும்.