வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குவது எப்படி?

Kalaingar Magalir Urimai Thogai : வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதால், இந்த திட்டத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்குமா?, எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /9

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2025-26ல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான பணிகள் இப்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளன.

2 /9

இதனால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேராதவர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இந்த திட்டத்தில் சேர ஒரு சூப்பரான வாய்ப்பை அரசு கொடுத்திருக்கிறது.   

3 /9

தகுதியான பெண்கள் எல்லோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

4 /9

யார் தகுதியான பெண்கள் என்பதை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாமா? எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

5 /9

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு இருந்தாலே போதும். சரியான முகவரியில் ரேஷன் கார்டு வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

6 /9

வசிக்கும் முகவரியில் ரேஷன் கார்டு இருப்பது அவசியம். ஏனென்றால் அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்யும்போது ரேஷன் கார்டு இருக்கும் முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்க வாய்ப்புள்ளது. 

7 /9

மற்றபடி, சொந்த வீடு இல்லையென்றாலும் வாடகை வீட்டில் வசித்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள பெண்களில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்

8 /9

குடும்ப அட்டையில் ஆண்கள் புகைப்படம் இருந்தாலும் பெண்கள் குடும்ப தலைவியாக கருதப்பட்டு மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெறலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வயது 21 நிரம்பியிருக்க வேண்டும். 

9 /9

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். இதனால் அவர்களும் மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியும்.