மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம்!

Written ByR Balaji
Published: Apr 27, 2025, 02:56 PM IST|Updated: Apr 27, 2025, 02:56 PM IST

மகளிர் உரிமைத்தொகை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். 

விரிவாக்கம் செய்யப்படும் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது இங்கு பார்க்கலாம். 

 

1/6

ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை பெறக்கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என சொல்லப்படுகிறது. 

2/6

மகளிர் உரிமைத்தொகை ஜூன் மாதம் முதல் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

3/6

நேராக மாநகராட்சி அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம். 

4/6

இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

 

5/6

ஆனால் ஏற்கனவே விண்ணபித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேராக மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும். 

6/6

ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய விண்ணப்பங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜூன் மாதம் முதல் வாரம் விண்ணப்பம் செய்யும் பணிகள் தொடக்கப்பட உள்ளது.