பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Published: Sep 29, 2025, 01:32 PM IST|Updated: Sep 29, 2025, 01:32 PM IST

Mathi Angadi : தமிழ்நாட்டு பெண்கள் மதி அங்காடி நடத்த விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

Mathi Angadi : தமிழ்நாட்டு பெண்கள் கூட்டாக இணைந்து மதி அங்காடி நடத்தலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

 

1/10

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மதி அங்காடி நடத்தலாம். இதுதொடர்பான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. 

 

2/10

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

 

3/10

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலையரங்கம் மெயின் ரோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று அவற்றில் தகுதியான சுய உதவிக் குழுவினை தேர்வு செய்யப்படவுள்ளது.

 

4/10

அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக்குழு/ கூட்டமைப்பை மட்டுமே தேர்வு செய்யப்படும். தகுதியுள்ள சுய உதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்பந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீh;மானத்தின் அடிப்படையில் மதி அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புக்கு அருகாமையில் உள்ள வேறு மகளிர் குழுவினரை தேர்வு செய்யப்படும்.

 

5/10

தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு, அப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி அளவிலான/ பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசியம். பொருட்கள் உற்பத்தி/ விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடைய சுய உதவிக் குழுக்களாக இருத்தல் வேண்டும்.

 

6/10

மாற்றுத்திறனாளி/ நலிவுற்றோர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன், குறைந்தது ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்றிருத்தல் வேண்டும். 

 

7/10

சுய உதவிக்குழு தொடங்கி ஓர்ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்/ சமுதாய அமைப்பாளரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

 

8/10

தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உரிமை கொண்டாட இயலாது. மதி அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

 

9/10

சுய உதவிக்குழுவின் விற்பனை அளவு மற்றும் செயல்பாட்டு திறன் அடிப்படையில் தொடர்ந்து மதி அங்காடி நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க மாவட்ட அளவிலான குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும்.

 

10/10

எனவே, மேற்காணும் விதிமுறைகளின்படி தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் அறை எண்:28, (தரை தளம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) மாவட்ட ஆட்சியரக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 07.10.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.